மரணத்திற்கு அப்பால் (பகுதி 4)

இறந்தவர்கள் கனவில் வந்தால் ?

கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை.

அதனை சரியான வழியில் நாம் கவனமாக புரிந்து கொண்டால், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பல்வேறு நுண்ணறிவுகளை நாம் பெறலாம். தூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா? இறந்து போன சொந்தமோ அல்லது நண்பனோ ஏன் நம் கனவில் வருகிறார்கள் என்ற கேள்விக்கு உளவியல் ரீதியாகவும் ஆன்மீக நிலைப்பாடுகளிலும் பதிலளிக்க வேண்டி வரும். இங்கு இறந்தவர்கள் உங்கள் கனவில் வருவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

இறந்த ஆன்மாக்கள் உங்களை தொடர்பு கொள்ள ஏன் கனவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள் இறந்த பிறகு, இறந்தவர்களுக்கு நுண்ணியம் வாய்ந்த சக்தி கிடைக்கும். நீங்கள் விழித்திருக்கும் நிலையில் இருப்பதை விட தூக்கத்தில் தான் அவர்கள் உங்களுடன சுலபமாக தொடர்பு கொள்ள முடியும். நீங்கள் விழித்திருக்கும் போது, உங்களது ஐம்புலன்களும் வேலை செய்து கொண்டிருக்கும்.

அதனால் தங்களை இறந்த ஆன்மாக்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறது என்பதை மிக உயர்ந்த ஆன்மீக பீடத்தை அடைந்தவர்களை தவிர மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. மறுபுறம், கனவுகளின் போது, நுட்பமான செய்திகளுக்கு நம் மனது அதிகமாக செவி சாய்க்கும். அதனால் தான் இறந்தவர்கள் உங்களை கனவில் தொடர்பு கொள்ளும் முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இறந்தவர்களை பற்றி கனவு காண்பதற்கான உளவியல் காரணங்கள் இறந்தவர் உயிருடன் இருந்த போது அவருக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அல்லது மன வருத்தம் உங்களை வதைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கனவுகளில் இறந்தவர்கள் தோன்றலாம். அவர்களின் இறப்பு உங்களுக்கு அதீத பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர்களை நீங்கள் கனவில் காணலாம். அப்படிப்பட்ட சூழலில், நம் ஆழ்மனதில் ஆழமாக வேரூன்றிய நம் உணர்வுகளின் வெளிப்பாடே கனவுகள்.

இறந்தவர்களைப் பற்றி கனவு காண்பதற்கான ஆன்மீக காரணங்கள் இறந்து போன சொந்தக்காரரோ அல்லது நண்பனோ உங்கள் கனவில் தோன்றுவதற்கு ஆன்மீக காரணமும் உள்ளது. சில சமயம், இறந்து போன ஆன்மாவிற்கு, பூமியில் வாழும் தன் சந்ததி வழியாக ஏதேனும் உதவி தேவைப்படலாம். மேலும், உங்கள் உதவி மூலமாக யாரையாவது பலி தீர்க்க நினைக்கலாம், அல்லது குடும்பம்நண்பர்கள் வட்டத்தில் யாருடனாவது தொடர்பு கொள்ள நினைக்கலாம். முதலில் கூறியது முதன்மையான காரணமாக கருதப்பட்டாலும், இரண்டாவதாக கூறியது மிக அரிதானதே.

ஆன்மீக கனவை புரிந்து கொள்வது எப்படி?

ஒரு கனவு குறைந்தது மூன்று முறைக்கு மேலாக வந்தால், அதனை ஆன்மீக சார்ந்த கனவாக கூறலாம். இறந்த ஆன்மாவிற்காக நீங்கள் ஏதாவது செய்வீர்கள் என உங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தால், அது உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யும். இறந்த பிறகு சாந்தி கிடைக்க, அல்லது தடைகளை நீக்க உங்களிடம் அதற்கான உதவியை சுட்டிக் காட்டலாம்.

அகால மரணம் அடைந்தவர்கள் ஏன் கனவில் வருகிறார்கள்?

நீண்டகாலமாக நோய்வாய் பட்டிருத்தல் அல்லது இயற்கையான வழிகளில் மரணிப்பவர்களுக்கு அவர்களின் மரணத்தை எதிர்நோக்க முடியும். அதனால் இறந்த பிறகு அவர்கள் பாதையில் செல்ல அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் எதிர்பாராத தருணங்களில் கொடூர மரணங்களை சந்தித்தவர்கள், மன ரீதியாக சாவிற்கு தயாராக இருந்திருக்க மாட்டார்கள். அதனால் இறந்த பிறகு அவர்களால் சாந்தி அடைய முடியாது. சாந்தியைப் பெறும் நோக்கில் அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள.

மறைந்த ஆன்மாக்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

முதல் கட்டமாக, அவர்களின் நினைவில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றாலோ அல்லது அவர்களின் நினைவு உங்களை வாட்டுவதை தவிர்க்க வேண்டுமென்றாலோ, ஸ்ரீ குருதேவா தட்டா மந்திரத்தை தொடர்ச்சியாக ஜெபிக்கவும். இறந்த குடும்ப உறுப்பினர் அடிக்கடி கனவில் தோன்றினால், நாராயண நாகபலி அல்லது திரிபிண்டி ஷ்ரதா போன்ற சடங்குகளை மேற்கொள்ளலாம். அத்தகைய சடங்குகளில் சாஸ்த்ரிகள் ஓதும் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இறந்த ஆன்மாக்கள் சாந்தியடைய அது பெரிதும் உதவும்.

அடுத்து வரும் மரணத்திற்கு அப்பாலில் NDE (Near Death Experience) சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் கூறியவைகளை பார்ப்போம்..

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!