பழநி

பழநி மலைக்கோயில் சுவாமிக்கு ஆறுகால பூஜைகளில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

காலை விளாபூஜையின் போது வேட அலங்காரம் (அல்லது) சாது, சந்நியாசி அலங்காரம். சிறுகாலசந்தி – பாலசுப்பிரமணியர்.
காலசந்தி – பாலசுப்பிரமணியர்.
உச்சிகாலம் – வைதீகாள் அலங்காரம். சாயரட்சை – ராஜ அலங்காரம்.
அர்த்தஜாமம் – வெள்ளைசாத்துப்படி(புஷ்பாலங்காரம்) செய்யப்படுகிறது.

இதில் ஆண்டி கோல த்தைப்பார்த்தால் நாமும் ஆண்டியாவோம் என்பது வதந்தி. வாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் சகஜம் என்பதை உணர்த்தவும், சுவாமியின் வரலாற்றைக் காட்டவுமே இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இருப்பினும் பக்தர்களின் நிலையை அறிந்து கோயில் நிர்வாகம் இந்த அலங்காரத்தை பக்தர்கள் பார்க்காத அளவிற்கு ‘சம்பிரதாயத்திற்காக’ சில நிமிடங்கள் செய்து விட்டு பிறகு வேறு அலங்காரத்திற்கு மாற்றி விடுகின்றனர்.

பழநி முருகனின் ‘பட்ட’ பெயர்கள்

கடவுளை நாம் பல்வேறு பெயர்களில் அழைக்கும்போது, அது ‘பட்ட’ பெயர்கள்… அதாவது, பட்டம் சூட்டிக்கொள்ளும் பெயர்கள் ஆகின்றன. நான்கு வேதங்களில் மிக முக்கியமான ‘ரிக்’ வேதம் முருகனை, ‘சுப்பிரமண்யோம், சுப்பிரமண்யோம், சுப்பிரமண்யோம்’ என்று போற்றுகிறது. பக்தர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகனின் அருள் கிடைப்பது திண்ணம். தமிழ் இலக்கியத்தில் முருகனுக்கு பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில… சக்திதரர், கந்தசாமி, தேவசேனாதிபதி, சுப்பிரமணியர், கஜவாகனர், சரவணபவர், கார்த்திகேயன், குமாரர், சண்முகர், தாராகாரி, சேனானி, பிரம்மசாஸ்தா, வள்ளிகல்யாணசுந்தரர், பாலசுவாமி, கிரவுன்சபேதனர், சிகிவாஹனர், அக்னிஜாதர், சவுராபேயர், காங்கேயர், குகர், பிரம்சாரி, தேசிகர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!