சிவன் சொத்து குல நாசம் – இதன் அர்த்தம் என்ன?

சிவனின் சொத்தாக, அவர் அருளிய முல வித்தாக கருதப்படுவது சித்த மார்க்கம். அத்தகைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள் சித்தர்கள். ஒருவர் சித்தராக வேண்டும் என்றால் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது. நினைப்பவர் எல்லாம் சித்தர் ஆகிவிட முடியாது.

நரை, திரை, முப்பு என்று நம்மிடம் கேட்டுக்கொண்டிருக்காமல் பால்ய, இளமை, முதுமை என மரணத்தை நோக்கி தானாக நகர்ந்து கொண்டிருக்கும் காயத்தை (உடலை) தன்வயப்படுத்தி நிறுத்த வேண்டும். சதா காலமும் சுக்கிலத்தை, அதாவது நாதவிந்தை கட்ட வேண்டும். ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலத்தை அறுக்க வேண்டும். அனைத்து பந்தங்கள் மீதும் பாசம் வைத்திருக்கும் தன்மையை நீக்க வேண்டும். அத்தகையவனே சித்தி அடைந்தவன்.

இதில் மிகவும் முக்கியமானது, யோக பயிற்சியின் முலம் குண்டலினியை எழச் செய்வதாகும். அதாவது, ஆண் ஆனவன், தனது விந்தை பூமியை நோக்கி விழச் செய்யாமல், அதை பிரம்மச்சரியத்தால் கட்டி, உச்சந்தலையை நோக்கி உயர்த்தி, உள் நாக்கில் அமிர்தத் துளிகளாய் விழ வைக்க வேண்டும். அதன்பின்னரே அவனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும்.

இவ்வாறு விந்துவை ஒருவன் மேல் நோக்கி எழுப்பினால் அவனால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாது. அவனது வம்சம் அவனுடனேயே அழிந்துவிடும்.

இதனால்தான் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!