குளிக்கும் முறைப் பற்றி இந்து மதம்

    குளிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடக்கு திசை நின்று (இவை இரண்டும் உத்தம திசைகள்) குளிக்க வேண்டும். கர்மம் செய்த பின்னும், மாயானத்திற்கு சென்று வந்தால் மட்டுமே தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு நோக்கி நின்று குளித்தால் உடல் நோய் வரும்.
    குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் “ஓம்” என்று தியானம் செய்து எழுதினால் அந்த நீர் கங்கா நீராக மாறிவிடும். இந்த நீரைப் பயன்படுத்தி குளிப்பதால் இது கங்கா ஸ்நானம். ஒரு நிமிட தியானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு குளித்தால், அது உள் பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகம் ஆகிவிடும்.
    அக்னி எப்போதும் மேல் நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவது தான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நினைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். நமது மண்டை ஓடுக்கு எப்படிப் பட்ட அக்கினியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிர்ச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.
    தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிரஷ்டம்” என்போம். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப் பெரியது. அங்கு தான் அக்கினியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால் குளித்து முடித்தவுடன் முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும். துவட்டப் பயன்படுத்தும் துண்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து துவட்டுவது தான் சிறப்பு. உலர்ந்த துணியினால் துணியால் துடைப்பதனால் பல வித நோய்கள் தான் உண்டாகும்.
    பிறரிடம் பேசக் கூடாத மூன்று நேரங்களில் குளிக்கும் நேரமும் ஒன்று. ஆதலால் குளிக்கும் நேரத்தில் மௌனத்தை கடைப் பிடிக்கலாம் அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை கடைப்பிடிக்கலாம்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!