கணவன் சாப்பிட்ட அதே இலையில் மனைவி உண்ண காரணம்

மேலே உள்ள கேள்வியைப் பார்த்துவிட்டு ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று எல்லாம் என்னிடம் வாதாட வந்து விடாதீர்கள். கணவன் சாப்பிட்ட அதே இலையில் மனைவி உண்ண காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தெரிந்துக்கொள்ள விரும்பினால் தொடருங்கள்.

பொதுவாக எந்தப் பெண்ணும் சமைக்கும் பொழுது அதனை தன் கணவன் ரசித்து ருசித்து உண்ண வேண்டும் என்பதையே மனதில் கொண்டு சமைக்கின்றாள். அவ்வாறு சமைத்த உணவை கணவன் ரசித்து உண்பதைப் பார்க்க வேண்டும் என்பதாலும், கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான். அவனுக்கு பின் அதே இலையில் உணவு உண்ணும் மனைவி கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த பழக்கம்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்….

அது மட்டுமின்றி கணவன் வெளியே சென்றிருக்கும்பொழுது நமக்காக நம் மனைவி இன்னும் சாப்பிடமால் காத்துக் கொண்டிருப்பாள் என்பதை உணரும் பொழுது நேரம் தாமதம் ஆகாமல் சீக்கிரம் வீட்டுக்கு வர முயற்சி செய்வான். இது கணவனுக்கு மாத்திரம் கிடைக்கும் ஒரு சந்தோஷமாகும்.

அறிவியல்படி விளக்க வேண்டுமானால் பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒருவித திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிட உதவும். இதனாலோ என்னவோ கணவன் முதலில் உண்டு விட்ட பிறகு மனைவி அதே இலையில் உண்ண வேண்டும் என்று கூறினார்கள்.

நம்பினால் நம்புங்கள் – இந்துக் கலாச்சாரத்தில் மட்டும் இந்த நடை முறை இல்லை. இஸ்லாத்திலும் நாம் இதனைக் காணாலாம். “சாப்பிட்டு முடித்தவுடன் உங்கள் விரல்களை நீங்களோ அல்லது மற்றவரோ (உங்கள் விரல்களை) சூப்பாதவரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்காதீர்கள்” என்பது நபிமொழியாகும். நாம் நமது விரலை சூப்புவது என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இங்கு மற்றவர் நம் விரலை சூப்புவது குறித்தும் கூறப்பட்டுள்ளது எனில் அந்த மற்றவர் யாராக இருக்க முடியும்? மனைவியாகத்தானே இருக்க முடியும்!

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!