அழகு அணிச் சித்தர்

பெயர் : அழகு அணிச் சித்தர்

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்….
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ..
நண்பா!.. பிறப்பும் அதனால் வரும் இறப்பும் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பிறப்பும் இறப்பும் இல்லாத ஆன்மா தன் உண்மை இயல்பை அறியும்போது மரண பயம் அற்றுப்போகும். இதனைத்தான் ஆன்ம விடுதலையென வேதங்கள் கூறுகின்றன. ஆன்மாவான நான் அழிவில்லாதவன். ஐம்பூத சேர்க்கையாலான உன் பருவுடல் மட்டுமே அழிகிறது. உன் வினைப்பயனுக்கேற்ப நான் வேறோர் உடலைத் தேடவேண்டியிருக்கிறது. நின் ஆசைகளும், அவற்றின் விளைவுகளான வினைகளும் அற்றுவிடுமாயின் உடல் விட்டு உடல் என்று நான் ஓடத்தேவையில்லை

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!