சித்தர்கள்

சித்தர்கள் என்னும் சொல் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான சொல். சித்தர்கள் ஒப்பற்ற ஆற்றலுடையவர்களாகவும், பெரும் கருணையாளர்களாகவும் மதிக்கப்படுகின்றார்கள். சித்தர்கள் என்ற சொல்லுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது.


யோகிகள், சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அழைக்கப் படுபவர்கள் அனைவரும் ஒருக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் போல ஒரு மாயை நிலவினாலும், இவர்களில் பொதுவாக மூன்று வகையானோர் உள்ளனர்.

* தம்முன்னே கிடக்கும் தெய்வக் குறிப்பைக் கண்டு அதன்படியே நடந்து ஆன்மீக அனுபவங்களைப் பெற்று மற்றவர்களைத் தம்மிடம் அணுகவொட்டாது மற்றவர்களின் பார்வைக்கு ஏளனமாகக் காட்சி அளிப்பார்கள்.

* அணைத்துயிர்களும் முன்னேற வேண்டும் என்று கருதி அதி தீவிர ஆத்ம சாதனைகள் செய்து கிடைக்கும் ஆன்மீக அனுபவங்கள், தெய்வக் குறிப்புகள் யாவற்றையும் ஞாலத்திற்கு வெளியிட்டு மறைந்து விடுவார்கள்.

* இவர்கள் மற்றவர்களைத் தங்களிடம் அணுகவிடுவார்கள். ஆனால் தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களையோ முன்னேறும் வழிமுறைகளையோ பிறகு வெளியிடமாட்டார்கள். மாறாக நெருங்கி இருப்பவர்களின் குறைகளைத் தங்களின் ஆத்ம சக்தியால் போக்கிவிடுவார்கள்.

நம் மண்ணின் பொக்கிஷங்களாகப் போற்றப் பட வேண்டியவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்னும் சொல் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான சொல். சித்தர்கள் ஒப்பற்ற ஆற்றலுடையவர்களாகவும், பெரும் கருணையாளர்களாகவும் மதிக்கப்படுகின்றார்கள். சித்தர்கள் என்ற சொல்லுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது.

சித்தர்கள் என்றால் சித்தை உடையவர்கள் (அதாவது அறிவு படைத்தவர்கள்) என்று பொருள்.

சித் என்றால் அறிவு அல்லது அழிவில்லாதது என்று பொருள்.

கடவுளை சத் - சித் - ஆனந்தம் எனக் கூறுவர். "சத்" என்றால் "என்றும் உள்ளது" என்று பொருள். "சித்து" என்றால் பேரறிவு என்று பொருள். "ஆனந்தம் என்றால்" பேரின்பம் என்று பொருள். பேரறிவுப் பெரும் பொருளான கடவுளை உணர்த்தும் "சித்" என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு "சித்து", "சித்தன்" என்னும் சொற்கள் தோன்றியிருக்கலாம் என்றும் கூறுவர்.

"கடவுளைக் காண முயல்பவன் பக்தன்.

கண்டு தெளிந்தவன் சித்தன்"


என்னும் தேவரத்தில் கூறப்பட்டுள்ள வரிகள் சித்தர்கள் யார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது.

சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ எளிதில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும் நமது சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்றும் இருக்கின்றார்கள். சித்தர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை கொண்டவர்கள். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் மற்றும் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்துக் கூறுகின்றன.

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!"

என்று சொல்கிறார்.

சித்தர்கள் சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள், விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் கொண்டவர்கள்.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சித்தர்கள் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றவர்கள்.

அணுவைப் போலச் சிறிதாதல் -அணிமா

மேருவைப் போல பெரிதாதல் - மகிமா

காற்றுப் போல லேசாதல் - இலகுமா

பொன் போல பளுவாதல் - கரிமா

எல்லாவற்றையும் ஆளுதல் - ப்ராப்தி

எல்லாவற்றையும் வசப்படுத்தல் - வசித்துவம்

கூடு விட்டு கூடு பாய்தல் - பிராகாமியம்

விரும்பியதை எல்லாம் செய்து முடித்து அனுபவித்தல் - ஈசத்துவம்

என்று எட்டு வகைப் பெரும் பேறுகளை அஷ்டமா சித்திகள் என்பர்.

சித்தர்கள் சிவமயமாய் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை. சித்தர்களுக்கு மனிதர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே.

இறைவன் என்பவன் யார்?

அவனை அடையும் மார்க்கம் என்ன?

பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி?

பிரம்மம் என்பது என்ன?

இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான்?

உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது?

உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் - அவற்றின் இரகசியங்கள்,

இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி?

இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அட்டமாசித்திகள்,

யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள்

என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பல பிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம்.

சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம்.

சித்தர்கள் மிகவும் எளிய வாழ்கை வாழ்பவர்கள். இதைத் தான் பட்டினத்தார்

"உடுத்துவதற்கு ஒரு கோவணம், உறங்குவதற்குப் புறத்தின்னை, உண்பதற்கு காய்கனிகள், அருந்துவதற்கும் குளிப்பதற்கும் ஆற்று நீர்"

என்று கீழ்க்கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரிவிக்கின்றார். இவர் மேலும் மெய்ஞானம் உணர்ந்த சித்தர்களை

"பேய் போல் திரிந்து, பிணம் போல் கிடந்து, இட்ட பிச்சை எல்லாம் நாய் போல அருந்தி, நல்ல மங்கயர்களை எல்லாம் தாய் போல கருதும் தன்மையர்"

என்று கூறுகிறார்.

"உடைக்கோ வணம் உண்டு

உறங்கப்புறத் தின்னையுண்டு உணவிங்கு

அடைகாய் இலையுண்டு

அருந்தண்ணீருண்டு..."


சித்தர்கள் பொய் வேடம் போடாதவர்கள், வேடதாரிகளைச் சாடுபவர்கள், யாருக்கும் அடங்காமல் திரிபவர்கள். சித்தர்கள் மக்களோடு மக்களாக கலந்திருந்தாலும் அவர்களுடைய சித்தம் மட்டும் எப்போதும் "சிவம்" என்னும் புராணத்தில் ஒன்றியிருக்கும். சித்தர்கள் உடலால் இவ்வுலகில் இருந்தாலும் சிந்தனையால் சிவலோகத்தில் இருப்பார்கள். மேலும் இவர்கள் புளியம் பழமும் ஓடும் போல உலகியலில் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பார்கள். இதனால் தான் பெரும்பாலானவர்கள் சித்தர்களைப் பித்தர்கள் என்றும், பித்தர்களை சித்தர்கள் என்றும் மாற்றி நினைத்துக் கொள்கின்றனர்.

சித்தர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்......, சிவனே முதல் சித்தர் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறிவிடலாம். இதை பல பாடல்கள் எடுத்தக் காட்டாய்ச் சொல்கிறது.

சித்தர்களில் பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர். இதனை சித்தர்களில் குறிப்பிட்ட பதினெண் பேர் மட்டுமே என்றுக் கொள்ளாமல், ஒவ்வொருத் துறைக்கும் பதினெட்டு சித்தர்கள் என்று பொருள் கொண்டால் சிறப்பாக இருக்கும். இந்த பதினெண் சித்தர்கள், மண்ணில் பிறந்த உயிரினங்களில் மிக உயர்ந்த உயிரினமான மனித இனத்தோடு உறவுக் கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 48 வகைச் சித்தர்கள்:

1. பதினெட்டாம்படிக் கருப்புகள்

2. நவகோடி சித்தர்கள்

3. நவநாத சித்தர்கள்

4. நாத சித்தர்கள்

5. நாதாந்த சித்தர்கள்

6. வேத சித்தர்கள்

7. வேதாந்த சித்தர்கள்

8. சித்த சித்தர்கள்

9. சித்தாந்த சித்தர்கள்

10. தவ சித்தர்கள்

11. வேள்விச் சித்தர்கள்

12. ஞான சித்தர்கள்

13. மறைச் சித்தர்கள்

14. முறைச் சித்தர்கள்

15. நெறிச் சித்தர்கள்

16. மந்திறச் சித்தர்கள்

17. எந்திறச் சித்தர்கள்

18. மந்தரச் சித்தர்கள்

19. மாந்தரச் சித்தர்கள்

20. மாந்தரீகச் சித்தர்கள்

21. தந்தரச் சித்தர்கள்

22. தாந்தரச் சித்தர்கள்

23. தாந்தரீகச் சித்தர்கள்

24. நான்மறைச் சித்தர்கள்

25. நான்முறைச் சித்தர்கள்

26. நானெறிச் சித்தர்கள்

27. நான்வேதச் சித்தர்கள்

28. பத்த சித்தர்கள்

29. பத்தாந்த சித்தர்கள்

30. போத்த சித்தர்கள்

31. போத்தாந்த சித்தர்கள்

32. புத்த சித்தர்கள்

33. புத்தாந்த சித்தர்கள்

34. முத்த சித்தர்கள்

35. முத்தாந்த சித்தர்கள்

36. சீவன்முத்த சித்தர்கள்

37. சீவன்முத்தாந்த சித்தர்கள்

38. அருவ சித்தர்கள்

39. அருவுருவ சித்தர்கள்

40. உருவ சித்தர்கள்

பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.

“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)”

“எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”

“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”

“விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”


என்று பல குறிப்புகள் உள்ளன.

பல்வேறு நூல்களில் பதினெட்டுச் சித்தர்கள் என்று சொல்லப்பட்டு வந்தாலும், காலத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நூலும் ஒவ்வொருவாறு சித்தர்களை அடையாளப்படுத்துவதால், அவர்களை முடிந்த அளவு எளிய முறையில் விளக்க இங்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

சரசுவதி மகால் நூலகப் படத்தில் கீழ்கண்ட பதினெண் சித்தர் பெயர்கள் காணப்படுகின்றன.

1. திருமூலர்

2. இராமதேவர்

3. கும்பமுனி

4. இடைக்காடர்

5. தன்வந்தி

6. வான்மீகர்

7. கமலமுனி

8. போகர்

9. மச்சமுனி

10. கொங்கணர்

11. பதஞ்சலி

12. நந்திதேவர்

13. சட்டைமுனி

14. சுந்தரானந்தர்

15. குதம்பை

16. கருவூரார்

17. கோரக்கர்

18. பாம்பாட்டி

மேற்க் கூறிய பதிணென் சித்தர்களும் அஷ்டமாசித்திகள் அனைத்தும் பெற்றவர்கள்.

கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கீழ்கண்ட பதினெண் சித்தர் பெயர்களைக் குறிப்பிடுகிறது.

1. கும்ப முனி,

2. நந்தி முனி,

3. கோரக்கர்,

4. புலிப்பாணி,

5. புகண்டரிஷி,

6. திருமுலர்,

7. தேரையர்,

8. யூகி முனி,

9. மச்சமுனி,

10.புண்ணாக்கீசர்,

11. இடைக்காடர்,

12. பூனைக் கண்ணன்,

13. சிவவாக்யர்,

14. சண்டிகேசர்,

15. உரோமருஷி,

16. சட்டநாதர்,

17. காலாங்கி,

18. போகர்

நிஜானந்த போதம் கீழ்கண்ட பதினெண் சித்தர் பெயர்களைக் குறிப்பிடுகிறது.

1. அகத்தியர்,

2. போகர்,

3. நந்தீசர்,

4. புண்ணாக்கீசர்,

5. கருவூரார்,

6. சுந்தரானந்தர்,

7. ஆனந்தர்,

8. கொங்கணர்,

9. பிரம்மமுனி,

10. உரோமமுனி,

11. வாசமுனி,

12. அமலமுனி,

13. கமலமுனி,

14. கோரக்கர்,

15.சட்டைமுனி,

16. மச்சமுனி,

17. இடைக்காடர்,

18. பிரம்மமுனி

அபிதானசிந்தாமணி கீழ்கண்ட பதினெண் சித்தர் பெயர்களைக் குறிப்பிடுகிறது.

1. அகத்தியர்,

2. போகர்,

3. கோரக்கர்,

4. கைலாசநாதர்,

5. சட்டைமுனி,

6. திருமுலர்,

7. நந்தி,

8. கூன் கண்ணன்,

9. கொங்கனர்,

10. மச்சமுனி,

11.வாசமுனி,

12. கூர்மமுனி,

13. கமலமுனி,

14. இடைக்காடர்,

15. உரோமருஷி,

16.புண்ணாக்கீசர்,

17. சுந்தரனானந்தர்,

18. பிரம்மமுனி

அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934 இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. 1981 இலே தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது. அண்மையில் 2001ம் ஆண்டு தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், 11ம் பதிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது.

நூற்றி எட்டு சித்தர்கள்

நூற்றியெட்டு சித்தர்களில் மேல் கூறிய பதினெட்டு சித்தர்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களும் அடங்குவர். இவர்களை இங்கே சித்தர்கள் பட்டியலில் கொடுத்திருந்தாலும், பலர் இவர்களை மகாங்கலாகத் தான் கருதி வணங்கி வழிபடுகின்றனர்.

வள்ளலார் வடலூர்
சென்னிமலை சித்தர் கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி
சதாசிவப் பிரம்மேந்திரர் நெரூர்
ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் பேலூர் மடம்
ராகவேந்திரர் மந்திராலயம்
ரமண மகரிஷி திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்
குமரகுருபரர் காசி
நடன கோபால நாயகி சுவாமிகள் காதக்கிணறு
ஞானானந்த சுவாமிகள் அனைத்து தபோவனங்கள்
ஷீரடி சாயிபாபா ஷீரடி
சேக்கிழார் பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்
ராமானுஜர் ஸ்ரீரங்கம்
பரமஹம்ச யோகானந்தர் கலிபோர்னியா
யுக்தேஸ்வரர் பூரி
ஜட்ஜ் சுவாமிகள் புதுக்கோட்டை
கண்ணப்ப நாயனார் காளஹஸ்தி
சிவப்பிரகாச அடிகள் திருப்பழையாறை வடதளி
குரு பாபா ராம்தேவ் போகரனிலிருந்து 13 கிமி
ராணி சென்னம்மாள் பிதானூர், கொப்புலிமடம்
பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்
குழந்தையானந்த சுவாமிகள் மதுரை காளவாசல்
முத்து வடுகநாதர் சிங்கம் புணரி
இராமதேவர் நாகப்பட்டிணம்
அருணகிரிநாதர் திருவண்ணாமலை
பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்
மௌன சாமி சித்தர் தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது
சிறுதொண்டை நாயனார் திருச்செட்டாங்குடி
ஒடுக்கத்தூர் சுவாமிகள் பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது
வல்லநாட்டு மகாசித்தர் வல்லநாடு
சுப்பிரமணிய சித்தர் ரெட்டியப்பட்டி
சிவஞான பாலசித்தர் மயிலாடுதுறை முருகன் சந்நிதி
கம்பர் நாட்டரசன் கோட்டை
நாகலிங்க சுவாமிகள் புதுவை அம்பலத்தாடையார் மடம்
அழகர் சுவாமிகள் தென்னம்பாக்கம்
சிவஞான பாலைய சுவாமிகள் புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது
சித்தானந்த சுவாமிகள் புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்
சக்திவேல் பரமானந்த குரு புதுவையிலுள்ள முதலியார் பேட்டை
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது
அக்கா சுவாமிகள் புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே
மகான் படே சுவாமிகள் சின்னபாபு சமுத்திரம்
கம்பளி ஞானதேசிக சுவாமிகள் புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது
பகவந்த சுவாமிகள் புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்
கதிர்வேல் சுவாமிகள் ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு
சாந்த நந்த சுவாமிகள் ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது
தயானந்த சுவாமிகள் புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்
தஷிணாமூர்த்தி சுவாமிகள் பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்
ஞானகுரு குள்ளச்சாமிகள் புதுவை
வேதாந்த சுவாமிகள் புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது
லஷ்மண சுவாமிகள் புதுவையிலுள்ள புதுப்பட்டி
மண்ணுருட்டி சுவாமிகள் புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்
சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை
யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) திருவண்ணாமலை
கோட்டூர் சுவாமிகள் சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்
தகப்பன் மகன் சமாதி கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்
நாராயண சாமி அய்யா சமாதி நாகர்கோவில்
போதேந்திர சுவாமிகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்
அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் சென்னை பூந்தமல்லி
வன்மீக நாதர் எட்டிக்குடி
தம்பிக்கலையான் சித்தர் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்
மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது
குகை நாச்சியார் மகான் திருவண்ணாமலை
வாலைகுருசாமி சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை
பாம்பன் சுவாமிகள் திருவான்மியூர்
குமாரசாமி சித்தர் சுவாமிகள் கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்
பெரியாழ்வார் சுவாமிகள் அழகர் கோவில் (மதுரை)
மாயம்மா ஜீவசமாதி கன்னியாகுமரி
பரமாச்சாரியார் ஜீவசமாதி காஞ்சிபுரம்


ஈழத்து சித்தர்கள்

தமிழகத்தின் சித்தர்களைப் போலவே ஈழத்து சித்த பரம்பரை என ஒன்று இருந்திருக்கிறது. இவர்கள் காலத்தால் பிந்தியவர்கள். சமூக அமைப்பில் இருந்து விலகியவர்களாய் இருந்ததால், இவர்கள் குறித்த பெரிதான குறிப்புகள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை.

யோகிகள், சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அழைக்கப்படுவோர் எல்லோரும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்களே. இவர்களில் மூவகையினர் உள்ளனர்.

 1. தம்முள்ளே கிடக்கும் தெய்வக் குறிப்பைக் கண்டு அதன்படியே நடந்து ஆன்மிக அனுபவங்களைப் பெற்று மற்றவர்களைத் தம்மிடம்அனுகவொட்டாது மற்றவர்களின் பார்வைக்கு ஏளனமாக காட்சி அளிப்பார்கள்.


 2. அனைத்து உயிர்களும் முன்னேற வேண்டும் என்று கருதி அதி தீவிர ஆத்ம சாதனைகள் செய்து கிடைக்கும் ஆன்மிக அனுபவங்கள், தெய்வக் குறிப்புகள் யாவற்றையும் ஞாலத்திற்கு வெளியிட்டு மறைந்து விடுவார்கள்.


 3. இவர்கள் மற்றவர்களைத் தங்களிடம் அணுகவிடவார்கள். அனால் தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களையோ முன்னேறும் வழிமுறைகளையோ பிறகு வெளியிடமாட்டார்கள். மாறாக நெருங்கி இருப்பவர்களின் குறைகளைத் தங்களின் ஆத்ம சக்தியால் போக்கி விடுவார்கள். இவர்கள் செய்த அற்புதங்களையும் சொல்லியவைகளையும் அப்பகுதி மக்கள் வானாரப் புகழ்வார்கள்.


இறையுணர்வு பெற்றவர்கள், இறைவனை அடைய இறைவழி சென்றவர்கள், இறை தரிசனம் பெற்றவர்கள், இறைவனோடு கலந்தவர்கள் என்ற நிலையில் ஆத்ம ஞானிகள் உணரப்படுகிறார்கள்.

சித்தர்கள் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்பது பொருள். அதாவது வீடு பேறு அடைந்தவர்கள் என்றே கூறலாம். இந்த உடல் இருக்கும் போதே முக்தி அடைந்தவர்களை ஜீவன் முத்தர்கள் என்று அழைப்பர். சித்தன் வாழ்வு என்பது முருகப் பெருமானது கோவில். தமிழகத்தில் திருவாவினன்குடிக்கு முற்காலத்தில் சித்தன் வாழ்வு என்று பெயர் இருந்தது. திரு முருகாற்றுப் படை உரையில் திருவாவினன் குடியைப் பற்றி கூறுமிடத்தில் நச்சினார்க்கினியர் 'சித்தன் வாழ்வென்று சொல்லுகின்ற ஊர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றதென்றுமாம். அது சித்தன் வாழ்வு இல்லந்தோறும் மூன்றெரியுடைத்து என்று ஔவையார் கூறியதனால் உணர்க' என்று கூறுகிறார். எல்லாம் வல்ல சித்தனாக சிவ பெருமான் திருவிளையாடல் புரிகின்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.

கடவுளைப் காண முயல்கின்றவர்களைப் பக்தர்கள் என்றும், கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் தேவாரம் வேறு பிரித்துக் கூறும். சித்தர்களுக்குச் சாதி சமய பேதம் எதுவும் இல்லை. அவர்கள் எல்லாம் உயிர்களிலும் இறைவனை தரிசித்தவர்கள். அட்டமா சித்திகளைப் பெற்றவர்கள் பதிணென்மர் என்பர். அவர்களை மேலே குறிப்பிட்டுளோம். இவர்கள் யாவரும் பாரத நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கர்கள். காலத்தால் மிக மிக முந்தியவர்கள்.

ஈழத்திலேயும் இத்தகைய சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை வரலாற்று ரீதியாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் மூலமாகவும் அறியக் கிடக்கின்றது. இலேமூரியாக் கண்டம் இருந்த காலத்திலே அதாவது இந்து சமுத்திரம் தரைப் பரப்பாக இருந்த காலத்திலே ஈழமும் பாரத நாடும் ஒன்று சேர்ந்து இருந்தன என்று கூறப்படுகின்றது. வாட இந்தியாவில் எண்பத்துநான்கு சித்தர்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

"நிலந் தொட்டுப் புகார்; வானமேறார்; விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்"

என குறுந்தொகை மூன்று சித்திகளைக் கூறுகின்றது. இதனைக் கொண்டு சங்க காலத்திலும் சித்தர்கள் இருந்தார்கள் என்று எண்ண இடமுண்டு.

ஈழத்திலே பதினெட்டாம், பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்த ஒரு சிலருடைய வாழ்கை வரலாறுகள் தான் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

ஈழத்து சித்த மரபியலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெண் சித்தர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

 • கடையிற்சுவாமிகள்.
 • பரம குரு சுவாமிகள்
 • குழந்தை வேற் சுவாமிகள்.
 • அருளம்பல சுவாமிகள்.
 • யோகர் சுவாமிகள்
 • நவநாத சுவாமிகள்
 • பெரியானைக் குட்டி சுவாமிகள்
 • சித்தானைக் குட்டி சுவாமிகள்
 • சடைவரத சுவாமிகள்
 • ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
 • செல்லாச்சி அம்மையார்
 • தாளையான் சுவாமிகள்
 • மகாதேவ சுவாமிகள்
 • சடையம்மா
 • நாகநாத சித்தர்
 • நயினாதீவு சுவாமிகள்
 • பேப்பர் சுவாமிகள்
 • செல்லப்பா சுவாமிகள்.


இங்கு காணப்படும் பதினாறு சித்தர்களும் தங்கள் ஆத்ம சாதனையின் போது கீழ் கண்ட அனுபவங்களை தங்களின் அவரவர் நிலைக்கேற்றவாறு கண்டுள்ளார்கள்.

 • விதி அனுபவம்
 • உயிர் அனுபவம்
 • அருள் அனுபவம்
 • மரண அனுபவம்
 • ஆத்மா அனுபவம்
 • ஞான அனுபவம்
 • இறைக்காட்சி அனுபவம்
 • இறைவனோடு ஐக்யமாகும் சட்சிதானந்த அனுபவம்.


ஈழத்த்தில் இந்த பதினாறு சித்தர்கள் மாத்திரம் அல்ல. இன்னும் பலர் வாழ்ந்த்திருக்கிறார்கள். வாழ்ந்துக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுடைய சரித்திரம் பூரணப்படுத்தப்பட்ட சரித்திரம் என்று சொல்வதற்கு இல்லை. கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக அங்கங்கு கஷ்டப்பட்டு கிடைத்த குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும். இந்த விசயத்தில் அமரர் க. இராமசந்திரா அவர்கள் பெரும் பங்கு ஏற்றுள்ளார்கள் என்றே கூறவேண்டும். இங்கு கூறப்படும் சித்தர்களைப் பற்றி ஈழத்திலேயே பலர் அறியமாட்டார்கள். உலகின் பல பாகங்களிலும் உள்ள தமிழர்கள் மேலோட்டமாயேனும் ஈழத்து சித்தர்களை அறிய வேண்டும் என்ற ஆசையினாலேயே கிடைத்த குறிப்புக்களைக் கொண்டு தயாரித்திருக்கிறோம்.

சித்தர்கள் தொடர்பான அச்சிடப்பட்ட நூல் தேவையெனில் kovaiyellowpages அலுவலகத்தையோ அல்லது 98941 56789 என்ற எண்ணையோ தொடர்புக் கொள்ளவும். விலை ரூ. 250 மட்டுமே

Back
Featured Business
P

SURYA SREE ENGINEERING WORKS SURYA SREE RUBBER PRODUCTS

SF: 24 kongunadu Nagar, Ganapathy,covai

Coimbatore,Tamil Nadu,India

(21)
P

Sri Ayyappa Rubber Product

21-A, Mookambigai Nagar, maniyakaran palayam,Ganapathy, 3rd Street

Coimbatore,Tamil Nadu,India

(16)
P

Sakthi Tyres

No: 59 E Sakthi Road sivanathapuram

Coimbatore,Tamil Nadu,India

(15)
Recently Added Business
R

Aditya Paper Works

No 22d , Tatabad

Coimbatore,Tamil Nadu,India

(2)
R

Aditya Automobiles

No. 9/430 Cross Cut Road , Gandhipuram

Coimbatore,Tamil Nadu,India

(2)
R

Adithya Automobile Spare Parts

No. 9/435 Cross Cut Road , Gandhipuram

Coimbatore,Tamil Nadu,India

(2)